ADDED : ஜூலை 25, 2026 05:57 AM
ஈரோடு:'நீட்'
தேர்வுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்
சங்கம் சார்பில் ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில், 'இரவில் ஒன்று
சேருவோம்' என்ற அறிவிப்பை செய்திருந்தனர்.
இதன்படி நேற்று மாலை,
6:30 மணிக்கு வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்புக்கு மாணவர் சங்கம் மாவட்ட
தலைவர் நவீன் தலைமையில் மா.கம்யூ., கட்சியினர் சுப்பிரமணியம் உட்பட
பலர் பங்கேற்றனர். இரவில் விழித்திருப்போம். தேசத்தை விழித்தெழ
செய்வோம். உரைவீச்சு, கலை நிகழ்ச்சி, தப்பாட்டம், பாடல்கள் என இரவு
முழுவதும் நிகழ்ச்சி நடத்துவதாக கூறினர்.
ஆனால் நிகழ்ச்சிக்கு
அனுமதியில்லை என போலீசார் கூறியதை தொடர்ந்து, ஒரு மணி நேரம்
ஆர்ப்பாட்டம் மட்டும் செய்துவிட்டு கலைந்தனர்.
இதேபோல்
எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், ஈரோடு மாவட்ட தலைவர் சமீருல்லா தலைமையில்
புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன்பு நேற்று கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும்
சிறுவர்கள், தலை மற்றும் கை கால்களில் கட்டு போட்டு மாணவர் அமைப்பினர்
மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து கோஷமிட்டனர்.
