/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிலை கரைத்து திரும்பிய வாலிபர் விபத்தில் பலி
/
சிலை கரைத்து திரும்பிய வாலிபர் விபத்தில் பலி
ADDED : செப் 02, 2025 01:03 AM
புன்செய்புளியம்பட்டி:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம், புன்செய்புளியம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பவானிசாகர் அருகே பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.
சிலைகளை கரைத்து விட்டு அதிகாலையில் வாகனங்கள் திரும்பின. ஒரு டாடா ஏஸ் வாகனத்தில் புன்செய்புளியம்பட்டி கலைஞர் வீதியை சேர்ந்த சஞ்சய், 20, திருப்பூர் பனியன் நிறுவன தொழிலாளி பயணித்தார். வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் மேல் அமர்ந்திருந்தார்.
முடுக்கன்துறை சந்தை அருகே சஞ்சய் தவறி விழுந்து படுகாயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.