ADDED : அக் 22, 2024 01:32 AM
26ல் இளைஞர் திறன் விழா
ஈரோடு, அக். 22-
ஈரோடு மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனம் மூலம், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கும் பொருட்டு, இளைஞர் திறன் திருவிழா, சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லுாரியில், வரும், 26ம் தேதி காலை, 9:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் அழகு கலை பயிற்சி, தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, எம்பிராய்டரி பயிற்சி, குளிர் சாதனம் பழுது பார்த்தல், செல்போன் பழுது பார்த்தல், போட்டோகிராபி, சணல் பை தயாரிப்பு, ஊறுகாய், அப்பளம், மசாலா பொருள் தயாரிப்பு, உதவி செவிலியர் பணி என பல்வேறு பயிற்சிக்கு, 18 முதல், 35 வயது வரை உள்ளோர் தேர்வு செய்யப்படுகின்றனர். 10ம் வகுப்பு முதல் இளநிலை பட்டம் முடித்தோர் தேர்வு செய்யப்படுவர். உணவு, தங்குமிடம், பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.
கூடுதல் விபரத்துக்கு 'தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் மேம்பாட்டு திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, முதல் தளம், பூமாலை வணிக வளாகம், குமலன்குட்டை, ஈரோடு, போன்: 94440 94274' என்ற விலாசத்தில் அணுகலாம்.