ADDED : நவ 20, 2026 03:47 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:மொடக்குறிச்சி
பூந்துறை சாலை அண்ணா வீதியை சேர்ந்தவர் சாமி செங்கோட்டையன், 65.
மொடக்குறிச்சி தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளர். பள்ளி
பின்புறம் இவரது விவசாய நிலத்தில் கிணறு வெட்டும் பணி நடந்தது.
கிணற்றில் தண்ணீர் வந்தால் இறைக்க, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின்
மோட்டாரை வாங்கி, மோட்டார் அறையில் வைத்திருந்தார். கடந்த, 17 மாலை
சென்று பார்த்த போது மின் மோட்டார் திருட்டு போனது தெரியவந்தது.
இதுபற்றி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார்
விசாரணை நடத்தி, கணபதிபாளையம், செம்ப கவுண்டன்வலசு செல்வம் மகன்
பாலகிருஷ்ணன், 33, என்பவரை கைது செய்தனர்.
