/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஹெராயின் வைத்திருந்த வாலிபர்கள் குண்டாஸில் கைது
/
ஹெராயின் வைத்திருந்த வாலிபர்கள் குண்டாஸில் கைது
ADDED : ஜன 30, 2025 05:03 AM
ஈரோடு: ஈரோட்டில், ஹெராயினுடன் கைதாகி சிறை சென்ற வாலிபர்கள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் டூவீலர் ஸ்டாண்ட் அருகே, சந்தேகத்-துக்கு இடமளிக்கும் வகையில், கடந்த டிச., 17ல் இருவர் சுற்றி திரிந்தனர். அவர்களை, ஈரோடு மதுவிலக்கு போலீசார் விசாரித்-தனர். அவர்கள், அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாக்கு-மரி வரை செல்லும் ரயிலில், ஆலுவா வரை டிக்கெட் எடுத்து பய-ணித்தது தெரியவந்தது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி சுற்றி திரிந்தது எதற்காக என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்-ததால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில், 48 கிராம் ெஹராயின் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு, 48 லட்சம் ரூபாய். அவர்கள் அசாம் மாநிலம், மாரிகான் பகுதியை சேர்ந்த ஹசானுஜ் ஜாமல், 32, அசாத்துல் இஸ்லாம், 29, என தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு, கோவை மத்-திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இருவரையும், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, ஈரோடு எஸ்.பி. ஜவகர் மூலம் மதுவி-லக்கு போலீசார், ஈரோடு கலெக்டருக்கு மனு அளித்தனர். அதனை பரிசீலித்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நேற்று முன்-தினம் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.கோவை மத்திய சிறையில் இருக்கும் இருவருக்கும், அதற்கான நகலை போலீசார் வழங்கினர்.

