/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிற்சாலைகளில் பணிபுரிய ஈரோடு வந்த வட மாநில வாலிபர்கள்
/
தொழிற்சாலைகளில் பணிபுரிய ஈரோடு வந்த வட மாநில வாலிபர்கள்
தொழிற்சாலைகளில் பணிபுரிய ஈரோடு வந்த வட மாநில வாலிபர்கள்
தொழிற்சாலைகளில் பணிபுரிய ஈரோடு வந்த வட மாநில வாலிபர்கள்
ADDED : ஜன 22, 2024 11:50 AM
ஈரோடு: ஈரோட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரிய, நேற்று நுாற்றுக்கான வட மாநில தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் வந்திறங்கினர்.
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சிப்காட் மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டட பணி, உழவு பணிகளில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை விடுமுறையால், பெரும்பாலான வட மாநிலத்தவர், 10 நாட்களுக்கு முன்பு தங்கள் சொந்த ஊருக்கு பயணித்தனர். ஈரோடு பகுதியில் விடுமுறை முடிந்து, ஆலை உள்ளிட்ட பல இடங்களில் உற்பத்தி பணிகள் துவங்கி உள்ளது. போதிய தொழிலாளர்கள் இல்லாத நிலையால், முழு வீச்சில் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை வட மாநில ரயில்கள் மூலம் பீகார், ஒடிசா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்திறங்கினர். இவர்கள் அனைவரும் புரோக்கர்கள் மூலமாக, பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக வந்துள்ளனர்.