/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரி மண் கடத்தல் ஜெ.சி.பி., பறிமுதல்
/
ஏரி மண் கடத்தல் ஜெ.சி.பி., பறிமுதல்
ADDED : செப் 13, 2024 07:51 AM
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே ஏரி மண் கடத்திய ஜே.சி.பி., மற்றும் டிராக்டர் டிப்பரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா நன்னாவரம் கிராம ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று மாலை 5 மணி அளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஏரி மண் கடத்திய ஜே.சி.பி., மற்றும் டிராக்டர் டிப்பரை மடக்கினர். போலீசாரை கண்டதும் டிரைவர்கள் தப்பியோடி தலைமறைவாயினர்.
போலீசார் ஜே.சி.பி., மற்றும் டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.