/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க.,விற்கு கருப்புக் கொடி காட்டியவர்கள் அதே கட்சியில் 'ஐக்கியம்'

ADDED : ஏப் 02, 2024 11:06 PM

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள லக்கி நாயக்கன்பட்டியில் திமுக தேர்தல் பிரசாரத்தின் போது கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த வாலிபர்கள் தி.மு.க.,வில் இணைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கி நாயக்கன்பட்டியில் கடந்த மாதம் 27ஆம் தேதி தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் தேர்தல் பிரசாரம் செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்களிடம் வசந்தம் கார்த்திகேயன் அவர்களிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். அவர்கள் இப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர். எம்.எல்.ஏ., அமைத்து தரப்படும் என உறுதியளித்தார். பின் வாலிபர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
போராட்டத்தை கைவிட்ட 40க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஊராட்சித் தலைவர் ஷீலா ராஜேந்திரன் தலைமையில் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனை சந்தித்து தி.மு.க.,வில் தங்களைஇணைந்துகொண்டனர். அவர்களுக்கு எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.