/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
12ம் தேதி வேங்கோடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
/
12ம் தேதி வேங்கோடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
12ம் தேதி வேங்கோடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
12ம் தேதி வேங்கோடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ADDED : ஜூலை 08, 2024 05:12 AM
கள்ளக்குறிச்சி: வேங்கோடு கிராமத்தில் வரும் 12ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திகுறிப்பு:
கல்வராயன்மலையில் உள்ள வேங்கோடு கிராமத்தில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் வரும் 12ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. முகாமில் நிலப்பட்டா, வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித் தொகை, ரேஷன் கார்டுகள் மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் நலத்திட்ட உதவிகள் பெறும் பொருட்டு பொதுமக்கள் கல்வராயன்மலை தாசில்தார், சேராப்பட்டு வருவாய் ஆய்வாளர் மற்றும் வேங்கோடு வி.ஏ.ஓ., ஆகியோரிடம் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.