ADDED : ஜன 01, 2026 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: நுாரோலை கிராமத்தில் எலும்பு முறிவு தொடர்பான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு, ஊராட்சி தலைவர் கிருஷ்ணபிரசாத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தனலட்சுமி சதீஷ் முன்னிலை வகித்தார்.
கள்ளக்குறிச்சி எஸ்.கே., எலும்பு முறிவு மற்றும் சிறப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனை டாக்டர் சதீஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
2 நபர்கள் மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.
முகாமில், செவிலியர்கள் நித்யானந்தன், கோமதி, விக்னேஷ், ராமச்சந்திரன், ஜான்சி, ஞானசவுந்தரி, கோகிலா, பாக்யலட்சுமி, அரிபுத்திரன், விஜயா மற்றும் ஊர்பொதுமக்கள் பங்கேற்றனர்.

