/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
/
பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
UPDATED : டிச 31, 2025 04:21 AM
ADDED : டிச 31, 2025 04:17 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நேற்று நடந்தது.
தியாகதுருகம் தியாகதுருகம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூலவருக்கு திருமஞ்சனம் அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, காலை 5:00 மணிக்கு வைகுண்ட வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து மகாதீபாரதனை நடந்தது.உளுந்துார்பேட்டை உளுந்துார்பேட்டை ஸ்ரீ கனகவள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறந்து தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சிவராஜ் மற்றும் ஆண்டாள் சேவை குழுவினர் செய்திருந்தனர்.
வெள்ளையூர் ஸ்ரீதேவி பூதேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில், எலவனாசூர்கோட்டை ஸ்ரீதேவி பூதேவி தாயார் சமேத ராஜநாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நே ற்று அதிகாலை விஸ்வரூப தரிசனம், சுப்ரபாத சேவையும், காலை 4:30 மணிக்கு பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் பரமபத வாசலை கடக்கும் வைபவம் நடந்தது.
சங்கராபுரம் சங்கராபுரம் ஆற்றுபாதை தெரு பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியொட்டி பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தன.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சொர்கவாசல் வழியாக கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதேபோல் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

