/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் பெருமாள் கோவிலில் சொர்க்கவால் திறப்பு விழா
/
சின்னசேலம் பெருமாள் கோவிலில் சொர்க்கவால் திறப்பு விழா
சின்னசேலம் பெருமாள் கோவிலில் சொர்க்கவால் திறப்பு விழா
சின்னசேலம் பெருமாள் கோவிலில் சொர்க்கவால் திறப்பு விழா
ADDED : டிச 31, 2025 04:16 AM

சின்னசேலம்: சின்னசேலம் பெருமாள் கோவிலில் சொர்க்கவால் திறப்பு விழா நடந்தது.
சின்னசேலம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. விழாவையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து பரமபத வாசல் வழியாக செல்லும் வைபவம் நடத்தப்பட்டது. மேலும் மூலவர் பெருமாள் தயாருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து வைத்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
பூஜைகளை பட்டாட்சியர் ஜெயக்குமார் செய்து வைத்தார். இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இதேபோல் சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.