ADDED : மார் 28, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்லாநத்தம் அருகே, சேலம் மாவட்டம், பெரியேரியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சிவக்குமார், 43; பாண்டியன்குப்பம் பகுதியில் செந்தாமரை மனைவி லட்சுமி, 60; ஆகிய இருவரும் சாராயம் விற்றது தெரிந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

