/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 20 முதல் 25 சதவீத கட்டண சலுகை
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 20 முதல் 25 சதவீத கட்டண சலுகை
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 20 முதல் 25 சதவீத கட்டண சலுகை
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 20 முதல் 25 சதவீத கட்டண சலுகை
ADDED : ஜூன் 13, 2024 12:20 AM
கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு இளநிலை பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 20 - 25 சதவீதம் வரை சலுகை வழங்கப்படுவதாக சேர்மன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் சேர்மன் டாக்டர் மகுடமுடி கூறியதாவது: மாவட்டத்தில் புதுடில்லியின் 'நாக்' தரச்சான்று பெற்ற ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினிஅறிவியல், பி.சி.ஏ., பி.காம்., மற்றும் பி.பி.ஏ., ஆகிய 9 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன.
கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, உடனடியாக பணி கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
மேலும், கல்வித்திறனை மேம்படுத்த இணையதள வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம், நுாற்றுக்கணக்கான புத்தகங்களுடன் கூடிய நுாலகம், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நிர்வாக குழு சார்பில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் நலன் கருதி, மதிப்பெண் மற்றும் விளையாட்டு அடிப்படையில் இளநிலை பாட பிரிவில் முதலாமாண்டு சேருபவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 20-25 சதவீதம் வரை சலுகை வழங்கப்படுகிறது.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பேருந்து கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இதுதவிர, அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையும் மாணவர்களுக்கு பெற்றுத்தரப்படுகிறது.
இவ்வாறு சேர்மன் மகுடமுடி கூறினார்.