/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் கமிட்டியில் ரூ.3.57 லட்சம் வர்த்தகம்
/
தியாகதுருகம் கமிட்டியில் ரூ.3.57 லட்சம் வர்த்தகம்
ADDED : ஜூன் 25, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் கமிட்டிக்கு, நெல் 36 மூட்டை, சோளம் 15, எள் 10 உட்பட 61 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள்கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை நெல் 1,552, சோளம் 2,431, எள் 9,889 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 627க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 258, எள் 6 என மொத்தம் 31 மூட்டை விளைபொருட்களை கொண்டு வந்தனர். ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,460, எள் 9,400 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 704 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.