ADDED : மே 10, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே டாஸ்மாக்கில் மது பாட்டில் வாங்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணாபுரம் அடுத்த அத்தியூரைச் சேர்ந்தவர் மாரி, 42; இவர், நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில் வாங்கச் சென்றார். டாஸ்மாக் கடையின் அருகே மாரிக்கும், இளையாங்கண்ணியைச் சேர்ந்த பிரவீன் ஏசுதாஸ், பிரிட்டோ ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 8 பேர் மீது, பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து அந்தோணிசாமி மகன் பிரிட்டோ, 22; கானாங்காடு பிரான்சிஸ் மகன் சேது, 19; மற்றும் அத்தியூரைச் சேர்ந்த கண்ணன் மகன்கள் ரமேஷ், 25; விஜய், 28; ஆகிய 4 பேரை கைது செய்தனர்.