/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்பு கூட்டத்தில் 609 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்பு கூட்டத்தில் 609 மனுக்கள் குவிந்தன
ADDED : பிப் 25, 2025 06:46 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 609 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பட்டா மாற்றம், நில அளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தொழில் துவங்க கடனுதவி உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த 574 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை 35 என மொத்தம் 609 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.