/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பட்டப் பகலில் வீடு புகுந்து 7 சவரன் நகை திருட்டு
/
பட்டப் பகலில் வீடு புகுந்து 7 சவரன் நகை திருட்டு
ADDED : ஆக 29, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீடு புகுந்து 7 சவரன் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்துார்பேட்டை, திருநாவலுார் அடுத்த பெரும்பட்டு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது வீட்டிற்குள் நேற்று மாலை 4 மணியளவில் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 7 சவரன் நகைகளை திருடி சென்றனர்.
பின்னர் அருகில் உள்ள புஷ்பாகாந்தி என்பவரின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அங்கு நகை பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.