/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பவர்களுக்கு கூடுதல் நிதி பெற 75 பேர் தேர்வு

ADDED : செப் 05, 2024 06:54 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளி பராமரிப்பவர்களுக்கு கூடுதல் நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் நேர்முகத் தேர்வு முகாம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேர்வு முகாம் நடந்தது. இதில் மூளை முடக்கு வாதம், மன வளர்ச்சி குன்றியோர், முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், கடுமையான கை, கால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பவர்களுக்கு கூடுதலாக நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் நிதி பெறுவோர் தேர்வு செய்யும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
முகாமில் 79 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் அரசு எலும்பு முறிவு மருத்துவர் பரணிதரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி தலைமையில் மூட நீக்கிய வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர். அதில் 75 பேர்களுக்கு கூடுதல் நிதி வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.