/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.85 ஆயிரம் பணம் பறிமுதல்
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.85 ஆயிரம் பணம் பறிமுதல்
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.85 ஆயிரம் பணம் பறிமுதல்
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.85 ஆயிரம் பணம் பறிமுதல்
ADDED : ஏப் 02, 2024 04:12 AM

ரிஷிவந்தியம், : வாணாபுரம் அருகே ஆவணமின்றி எடுத்துச் சென்ற 85 ஆயிரத்து 150 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாணாபுரம் அடுத்த அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, குழந்தைகள் மேம்பட்டு திட்ட கண்காணிப்பாளர் சேகர் தலைமையிலான பறக்கும்படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மாருதி ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காரில் இருந்தவர் விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த நெற்குணம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பதும், உரிய ஆவணமின்றி 85 ஆயிரத்து 150 ரூபாய் எடுத்துச் சென்றதும் தெரிந்தது. உடன், பணத்தை பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.