/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பருத்தி மருந்து குடித்தவர் சாவு
/
பருத்தி மருந்து குடித்தவர் சாவு
ADDED : ஜூலை 22, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : கீழ்பாடியில் கடன் பிரச்னையால் மதுவில் பருத்தி மருந்து கலந்து குடித்தவர் இறந்தார்.
ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடியை சேர்ந்தவர் திருமலை, 40; இவருக்கு கடன் பிரச்னை உள்ளது. சில தினங்களாக வேலைக்கும் செல்லாததால் வீட்டில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலில் இருந்த திருமலை, நேற்று முன்தினம் மாலை பருத்திக்கு அடிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார்.
உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லம் வழியில் திருமலை இறந்தார். ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.