/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து இறப்பு
/
பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து இறப்பு
ADDED : செப் 07, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் பிரவீன்,22;. எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு மல்லாபுரத்தில் வேலை செய்து விட்டு தனது பஜாஜ் பல்சர் பைக்கில் ரங்கப்பனுார் ஏரிக்கரை வழியாக சென்றபோது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.