/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிப்பர் லாரி மோதி விபத்து: பைக்கில் சென்ற பெண் பலி
/
டிப்பர் லாரி மோதி விபத்து: பைக்கில் சென்ற பெண் பலி
டிப்பர் லாரி மோதி விபத்து: பைக்கில் சென்ற பெண் பலி
டிப்பர் லாரி மோதி விபத்து: பைக்கில் சென்ற பெண் பலி
ADDED : மார் 07, 2025 11:20 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டிப்பர் லாரி மோதி பைக்கில் சென்ற பெண் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி கவரைத்தெருவை சேர்ந்தவர் மதிவாணன்,60; இவர் நேற்று காலை 9:15 மணியளவில் மனைவி மனோ ரஞ்சிதத்துடன், பைக்கில் ஏமப்பேர் நோக்கி சென்றார். அண்ணாநகர் மின்வாரிய அலுவலகம் அருகே சென்ற போது, டிப்பர் லாரி ஒன்று, அவரது பைக்கை முந்தி சென்றது. அப்போது லாரியின் பின்பகுதி பைக் ஹாண்டில் பார் மீது இடித்தது. இதில் தடுமாறி விழுந்ததில், மனோரஞ்சிதம்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், டிப்பர் லாரி டிரைவர் வ.உ.சி., நகரை சேர்ந்த ராஜமாணிக்கம்,60; என்பவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.