/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நுாலகத்தை திறக்க நடவடிக்கை தேவை
/
நுாலகத்தை திறக்க நடவடிக்கை தேவை
ADDED : ஆக 26, 2024 05:22 AM

கச்சிராயபாளையம்: மாத்துார் கிராமத்தில் பூட்டிக் கிடக்கும் நுாலகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தில் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் பயனடையும் வகையில் கடந்த 2010-11ம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நுாலகம் அமைக்கப்பட்டது. இந்த நுாலகம் சில ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. இதனால் புத்தகம் வாசித்து வந்த மாணவர்களும், வாசிக்க ஆர்வம் உள்ள மாணவர்களும் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எனவே, பூட்டிக் கிடக்கும் நுாலக்ததை மீண்டும் திறந்து மாணவர்கள் மற்றும் வாசகர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

