/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
/
தியாகதுருகம் கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
தியாகதுருகம் கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
தியாகதுருகம் கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 13, 2024 05:32 AM

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் ஒன்றிய கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் திறந்த வேனில் சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தியாகதுருகம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு தீவிரமாக ஓட்டு சேகரித்தார். அப்போது சித்தலுார், பானையங்கால், குடியநல்லுார், தியாகை, நாகலுார், கண்டாச்சிமங்கலம், விருகாவூர், ஈய்யனுார், அசகளத்துார், சின்னமாம்பட்டு, திம்மலை உட்பட பல்வேறு கிராமங்களில் பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து, மலர்துாவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிரசாரத்தில் வேட்பாளர் குமரகுரு பேசியதாவது;
கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்று மக்களை ஏமாற்றியுள்ளது.
தற்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரிப்பால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு சிறப்பான திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டது. எனவே, வரும் தேர்தலில் இரட்டை இலைக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யமாறு கேட்டுக் கொண்டார்.
இதில் ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜவேல், ஜெயச்சந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, பாசறை செயலாளர் வினோத், பேரவை துணை செயலாளர் மணிவண்ணன், எம்.ஜி.ஆர்.,மன்ற இணை செயலாளர் ரமேஷ், மீனவரணி செயலாளர் ராமசந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், மணிவண்ணன், ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி குமார், சித்தலுார் மணி, ஒன்றிய பாசறை செயலாளர் பரியாஸ், பொருளாளர் கதிர்வேல், சுப்பிரமணியன், குமரவேல், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சந்திரசேகர், பாண்டுரங்கன், செல்வராஜ் உட்பட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

