/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளம்பெண் மாயம்; போலீசார் விசாரணை
/
இளம்பெண் மாயம்; போலீசார் விசாரணை
ADDED : ஆக 22, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி உலகப்பசெட்டி கொல்லை தெரு சேர்ந்த ஜெயவேல் மகள் வினோசக்தி,25; இவர் நேற்று முன்தினம் மாலை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர்.
அதில் கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு சேர்ந்த ஐயப்பன் மகன் பிரகாஷ் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக ஜெயவேல் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.