/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி., பள்ளி நீட் அகாடமியில் 'நீட் ரிப்பீட்டர்ஸ்' சேர்க்கை துவக்கம்
/
ஏ.கே.டி., பள்ளி நீட் அகாடமியில் 'நீட் ரிப்பீட்டர்ஸ்' சேர்க்கை துவக்கம்
ஏ.கே.டி., பள்ளி நீட் அகாடமியில் 'நீட் ரிப்பீட்டர்ஸ்' சேர்க்கை துவக்கம்
ஏ.கே.டி., பள்ளி நீட் அகாடமியில் 'நீட் ரிப்பீட்டர்ஸ்' சேர்க்கை துவக்கம்
ADDED : செப் 02, 2024 06:48 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் 50 சதவீத கட்டண சலுகையுடன் 'நீட் ரிப்பீட்டர்ஸ்' மாணவர்களுக்கான சேர்க்கை துவங்கியுள்ளது.
இது குறித்து கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நீட் பயிற்சி மைய இயக்குனர் அஞ்சப்பெல்லி ஷ்ரவன்குமார் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நீட் பயிற்சி வகுப்பு பல்வேறு சிறப்பம்சங்களுடன் நடத்தப்பட்டு வருகிறது. நீட் பயின்ற மாணவர்களில் இதுவரை அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் 636 பேர் மருத்துவ சேர்க்கை பெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெறுவதுடன், மருத்துவ சேர்க்கையிலும் முதலிடம் பிடித்து வருகிறோம்.
அதேபோல், ஏ.கே.டி., பள்ளியில் பயின்ற மாணவர்கள் பிரதிவிராஜ் சென்னையிலும், ேஹமந்த் ரூபன் ஹதராப்பத்திலும் ஐ.ஐ.டி.,யில் பயின்று வருகின்றனர். மாணவர் அரவிந்குமார் திருச்சியிலும், பாலாஜி காலிகாட்டில் என்.ஐ.டி., பயில்கின்றனர்.
தற்போது 'நீட் ரிப்பீட்டர்ஸ்' மாணவர்களுக்கான சேர்க்கை துவங்கியுள்ளது. இதில் 'நீட் - யூஜி 2024' தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் மற்றும் அரசு பள்ளியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது.
நீட் பயிற்சி வகுப்புகள் நேரடி நிர்வாகம் மூலம் தென்னிந்திய ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
'நீட் பயிற்சியில் நாள்தோறும் தேர்வு, பகுதி தேர்வு, நீட் மாதிரி தேர்வு உள்ளிட்ட சிறப்பு தேர்வுகளும் நடத்தப்படுகிறது. விடுதி வசதிகள் உள்ளது. நீட் ரீப்பிட்டர்ஸ் சேர்க்கைக்கு 6369146590, 9361165429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.