தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஹைடெக் வகுப்பறை உருவாக்க முன்னாள் மாணவர்கள் முடிவு

ஹைடெக் வகுப்பறை உருவாக்க முன்னாள் மாணவர்கள் முடிவு

ஹைடெக் வகுப்பறை உருவாக்க முன்னாள் மாணவர்கள் முடிவு


ADDED : மே 28, 2024 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2024 06:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் ஹைடெக் வகுப்பறை ஏற்படுத்த முடிவு செய்தனர்.

திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா வரும் ஜூலை, 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் அமைப்பினர் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த 86ம் ஆண்டு பேட்ச் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் பள்ளி தேவையை நிறைவு செய்யும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார்.

86ம் ஆண்டு பேட்ச் முன்னாள் மாணவர்கள் அமைப்பை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு குறிப்பிட்ட வகுப்பறைகளை முற்றிலும் டிஜிட்டல் மையமாக ஹைடெக் முறையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ஒப்புக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் வில்வபதி, பாலமுருகன், வெங்கடேசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us