ADDED : மே 22, 2024 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1993-94ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
அவர்கள் ஒரே நிறத்தில் சட்டை அணிந்து வந்திருந்தனர். அவர்கள் பள்ளியில் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவ பருவத்தில் ஒன்றாக படித்தபோது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் மாணவர்கள் சார்பில், குழு அமைத்து, பள்ளிக்கு தேவையான பொருட்கள் அன்பளிப்பாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
சிலர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

