/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தச்சூர் பாரதி கல்லுாரியில் ஆண்டு விழா
/
தச்சூர் பாரதி கல்லுாரியில் ஆண்டு விழா
ADDED : மார் 30, 2024 06:17 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, கல்லுாரி தாளாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமி, ஆக்ஸாலிஸ் பள்ளி தாளாளர் பாரத்குமார், செயலாளர் சாந்தி பாரத்குமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சுபா, ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் சமீம் பேசினார். விழாவில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவிகள், பாடவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகள், 100 சதவீதம் வருகை புரிந்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து கல்லுாரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

