
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : கல்வராயன் மலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், கரியாலுார் கோடை விழா அரங்கில், சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ், பி.டி.ஓ., ஜோசப் ஆனந்தராஜ், தாசில்தார் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட நல அலுவலர் பிரியதர்ஷினி வரவேற்றார்.
விழாவில், கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்தும், 7 வகை உணவுகள் வழங்கியும் வளைகாப்பு நடத்தப்பட்டது.
ஒன்றிய சேர்மன் சந்திரன், துணை சேர்மன் பாட்ஷாபீஜாகிர் உசேன், மாவட்ட கவுன்சிலர் அலமேலு, ஒன்றிய செயலாளர்கள் சின்னத்தம்பி, கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.