ADDED : மார் 12, 2025 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளகுறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த புதுமோகூர் நத்தமேடு சேர்ந்த கண்ணன் மனைவி மாரியம்மாள்,60; இவரது மகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
இதனால் மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 2 வீடுகள் உள்ளது.
அதில் ஒரு வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டில் மாரியம்மாள் தங்கியுள்ளார். கடந்த 10 ம் தேதி இரவு பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் திருட முயன்றுள்ளனர். இதில் வீட்டிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.