ADDED : ஜூலை 14, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தில் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நலச் சங்க புதிய ஆட்டோ ஸ்டேண்ட் திறக்கப்பட்டது.
ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க மாவட்ட தலைவர் அருண், ஹிந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் கண்ணன், பாலமுருகன், மணிகண்டன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். சங்க உறுப்பினர்கள் பயணிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். முறையான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஹிந்து முன்னணி நகர தலைவர் குமார் நன்றி கூறினார்.
