/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விருது வழங்கும் விழா
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விருது வழங்கும் விழா
ADDED : ஆக 25, 2024 06:34 AM

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் இந்திய நிறமாலை இயற்பியல் கழகம் சார்பில், விருது வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ, தர்மபுரி பெரியார் பல்கலைகழக பேராசிரியர் செல்வபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வரவேற்றார்.
கல்லுாரி ஆலோசகர் மதிவாணன் சிறப்புரையாற்றினார். கிண்டி கேம்பஸ் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பொன்னுசாமி முதன்மை உரையாற்றினார். நிகழ்ச்சியில், சென்னை இந்திய நிறமாலை இயற்பியல் கழக நிறுவனர், பேராசிரியர் குணசேகரன் பேசினார்.
தொடர்ந்து, திருச்சி ஜமால் முகமது கல்லுாரி இயற்பியல் துறை பேராசிரியர் ராஜ்முகமது, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் அறிவியல் முதுமுனைவர் சேதுகுணசேகரன் விருது வழங்கப்பட்டது.
துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.