
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த காட்டுவன்னஞ்சூர் செல்வமுருகன் கோவிலில் பால் குடம் ஊர்வலம் நடந்தது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பூரத்தை முன்னிட்டு பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
மதியம் 1:00 மணிக்கு தீ மிதி விழா நடந்தது. அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தனர்.

