/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது
/
பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது
ADDED : செப் 10, 2024 12:09 AM
கச்சிராயபாளையம்:
கரடிசித்துார் கிராமத்தில் பீர் பாட்டிலால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் ராம்தேவ், 28; இவர், நேற்று முன்தினம் 8:00 மணியளவில் மூப்பனார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அண்ணாமலை மகன் ராமர், 40; என்பவர் ராம்தேவிடம் பணம் கேட்டுள்ளார்.
தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராமர், பீர் பாட்டிலால் ராம்தேவின் தலையில் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தட்டிக்கேட்ட ராம்தேவின் அண்ணன் ராமச்சந்திரனையும் ராமர் கல்லால் தாக்கினார்.
காயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

