/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விதை சேமிப்பு கிடங்கு அமைக்க பூமி பூஜை
/
விதை சேமிப்பு கிடங்கு அமைக்க பூமி பூஜை
ADDED : ஆக 22, 2024 12:58 AM

கச்சிராயபாளையம், : கச்சிராயபாளையம் அரசு விதை பண்ணையில் புதிதாக விதை சேமிப்பு கிடங்கு அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் பேரூராட்சியில் மாநில அரசு விதை பண்ணை இயங்கி வருகிறது. இங்கு ரூ 60 லட்டசம் மதிப்பீட்டில் புதிதாக விதை சேமிப்பு கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் துவங்க நேற்று பூமி பூஜை செய்யப்பட்து. நிகழ்ச்சியில் உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார். தொடர்ந்து மாத்துார் கிராமத்தில் ரூ 40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையத்தையும் உதயசூரியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி, வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அன்பழகன், வேவளாண் உதவி இயக்குனர் பொண்ணுராசன், வேளாண் அலுவலர் ராஜா மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிகள் உட்பட கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.