/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காவல் நிலையம் முன் பா.ம.க.,வினர் முற்றுகை
/
காவல் நிலையம் முன் பா.ம.க.,வினர் முற்றுகை
ADDED : நவ 06, 2024 07:58 AM

உளுந்துார்பேட்டை : வி.சி.,கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உளுந்துார்பேட்டை காவல் நிலையத்தில் பா.ம.க.,வினர் முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.
கடலுார் மாவட்டம், புவனகிரியில் நடந்த வி.சி., ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ம.க.,வினர் ஏராளமானோர் உளுந்துார்பேட்டை காவல் நிலையம் முன் நேற்று முற்றுகையிட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது.
மாவட்ட துணைச் செயலாளர் சத்யா, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் நேரு, ஜெகன், மணிராஜ், சுரேஷ், முன்னாள் மாநில இளைஞரணி துணைத் தலைவர் தவஞானம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள் உடனிருந்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் பா.ம.க., மாவட்ட செயலாளர் பாலசக்தி தலைமையில் நிர்வாகிகள் தங்கஜோதி, பழனிவேல் உட்பட பலர் திரண்டு புகார் மனு அளித்தனர்.