/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்
/
அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்
ADDED : பிப் 26, 2025 05:20 AM
ரிஷிவந்தியம்:' ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர்  மணிகண்டன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குருதி வங்கி மருத்துவ அலுவலர் விஜயகுமார் குழுவினர், ரத்த தானம் செய்வதன் அவசியம், நன்மைகள், எத்தனை மாதத்திற்கு ஒரு முறை தானம் செய்யலாம், மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்பாடும் பாதிப்புகளை விளக்கினர்.  தொடர்ந்து, ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமில் 30 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், தியாகதுருகம் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

