/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ் பயணியிடம் வழிப்பறி; உளுந்துார்பேட்டையில் துணிகரம்
/
பஸ் பயணியிடம் வழிப்பறி; உளுந்துார்பேட்டையில் துணிகரம்
பஸ் பயணியிடம் வழிப்பறி; உளுந்துார்பேட்டையில் துணிகரம்
பஸ் பயணியிடம் வழிப்பறி; உளுந்துார்பேட்டையில் துணிகரம்
ADDED : மார் 09, 2025 05:37 AM
கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அருகே பஸ் பயணியிடம், வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலுார் மாவட்டம், கொல்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் உதயகுமார்,32; இவர் ஆந்திர மாநிலம், தடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணிபுரிகிறார். இருநாள் விடுமுறைக்காக, ஊருக்கு புறப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு தனியார் பஸ்சில் சென்றுக் கொண்டிருந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த பரிக்கல்லில் உள்ள ஓட்டலில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு பஸ் நின்றது.
அங்கு டீ குடித்துவிட்டு பஸ்சின் கடைசி இருக்கையில் உதயகுமார் அமர்ந்தார். அப்போது, ெஹல்மெட் அணிந்து, பைக்கில் வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, உதயகுமாரிடம் இருந்த ஒரு கிராம் தங்க டாலர், ரூ.3,200 பணம், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஹார்ட் டிஸ்க், சார்ஜர் உள்ளிட்ட ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.