ADDED : ஏப் 29, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் அருகே அரசு டவுன் பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் அரசு டவுன் பஸ் தடம் எண்.டி18 நேற்று முன்தினம் இரவு 9:30 மணி அளவில் லாலாபேட்டை சென்று திருக்கோவிலுார் வந்து கொண்டிருந்தது. நெடுமுடையான் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பஸ்சில் அதிக பயணிகள் இருந்ததால் பஸ் நிறுத்தத்தை தாண்டி பஸ்சை நிறுத்த டிரைவர் முற்பட்டபோது, பஸ்க்காக நின்றிருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் தேவராஜ், 32; ஆத்திரமடைந்து கல்லால் பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.
பஸ் கண்டக்டர் ரவிச்சந்திரன், 59; கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் பொது சொத்துக்களை சேதப்படுத்திய பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து தேவராஜை கைது செய்தனர்.

