/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழில் நெறி விழிப்புணர்வு திறன் வாரம் நிகழ்ச்சி
/
தொழில் நெறி விழிப்புணர்வு திறன் வாரம் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 06, 2024 05:29 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 9ம் தேதி முதல் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
அரசு சார்பில் ஆண்டுதோறும், ஜூலை 2வது வாரத்தில், தொழில் நெறி விழிப்புணர்வு திறன் வாரம் மற்றும் 15ம் தேதி திறன் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வரும் ஜூலை 9ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான நிகழ்ச்சியும், 10ம் தேதி உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் மகளிருக்கான நிகழ்ச்சியும், 11ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், மேலுார் டி.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரியில் கல்லுாரி மாணவர்களுக்கான நிகழ்ச்சியும் நடக்கிறது. 12ம் அன்று நெடுமானுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சியும், 15ல் சங்கராபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான நிகழ்ச்சியும் நடக்கிறது.
இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் சிறப்பு வல்லுநர்கள், பிறத்துறை அலுவலர்கள் பங்கேற்று விழிப்புணர்வு கருத்துரை வழங்குகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.