/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒருவரை தாக்கிய இருவர் மீது வழக்கு
/
ஒருவரை தாக்கிய இருவர் மீது வழக்கு
ADDED : ஏப் 25, 2024 11:09 PM
கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சி அருகே சுவாமியை துாக்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கிய, இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சங்கராபுரம் அடுத்த மோகூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்,45. மோகூரில் நடக்கும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில், முதலில் யார் சுவாமியை துாக்குவது என இரு வகையறாவிற்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த கந்தன் மகன் அஜய், 24; சேலத்தை சேர்ந்த சக்திவேல் மகன் அபினேஷ் ஆகியோர் கண்ணுசாமி மகன் மகேந்திரன் என்பவரிடம் பிரச்னையில் ஈடுபட்டனர்.
அப்போது, செந்தில் மற்றும் ஊர்பொதுமக்கள், வழக்கமாக மகேந்திரன் குடும்பத்தினர் தான் சுவாமியை துாக்குவர், பிரச்னை செய்யாதீர்கள் என தெரிவித்தனர்.
இதனால் கோபமடைந்த அஜய் மற்றும் அபினேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் செந்திலை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் அஜய், அபினேஷ் ஆகிய இருவர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, அதில் அஜயை கைது செய்தனர்.

