/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் கடத்தல் இருவர் மீது வழக்கு
/
மதுபாட்டில் கடத்தல் இருவர் மீது வழக்கு
ADDED : மே 19, 2024 05:28 AM
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே விற்பனைக்காக மதுபாட்டில் எடுத்து சென்ற இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சித்தலுார் - கொங்கராயபாளையம் சாலையில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு பேரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். உடன் இருவரும் பைக்கினை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். தொடர்ந்து, பைக்கினை சோதனை செய்தததில், 35 மதுபாட்டில்கள் இருந்தது தெரிந்தது.
விசாரணையில், பைக்கில் வந்தவர்கள் கொங்கராயபாளையத்தை சேர்ந்த பரமசிவம் மகன் விஜயராஜ்,20; சுப்ரமணியன் மகன் பச்சமுத்து,21; என்பதும், விற்பனைக்காக மதுபாட்டில் எடுத்து சென்றதும் தெரிந்தது. இதனையடுத்து பைக் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய இருவர் மீதும் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

