தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜூலை 23, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சங்கராபுரம் அடுத்த விரியூர் இம்மாகுலேட் மகளிர் கல்லுாரி நாட்டு நலப்பணிதிட்டம் சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சங்கராபுரத்தில் நேற்று நடந்தது.

பொது சேவை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார்.வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன்,ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார்,தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கண்ணன் வரவேற்றார்.

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் தாசில்தார் வைரக்கண்ணன் துவக்கிவைத்தார். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் தங்களை  முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டி விழிப்புணர்வு  துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர்.

முன்னாள் வியாபாரிகள் சங்க தலைவர் சேகர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us