மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை விளக்க பயிற்சி
மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை விளக்க பயிற்சி
ADDED : ஜூலை 23, 2026 04:21 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதில், வரும் 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பும், ஆக., மாதம் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பும் நடக்கிறது. இதையொட்டி ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து செயல் விளக்க பயிற்சி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமையில் நடந்தது.
இதில், புள்ளியல் துறை துணை இயக்குநர் கனகேஷ்வரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் விதம் குறித்து பயிற்சி அளித்து, சந்தேகங்களுக்கு பதிலளித்தார். மேலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க ரேஷன்கடைக்கு வரும் பொதுமக்களுக்கு கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, துணைப்பதிவாளர் சாந்தி (பொது விநியோக திட்டம்), கண்காணிப்பாளர் செல்வராசு, சார்பதிவாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
