தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் பயிற்சி முகாம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் பயிற்சி முகாம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 09, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 02:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிக்கான அலுவலர்களுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் திருக்கோவிலுார் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி ஆணையர் திவ்யா தலைமை தாங்கினார். நகரமைப்பு ஆய்வாளர் ஹரிஷ் முன்னிலை வகித்தார். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கணக்கெடுப்பு பணியை சரியான முறையில் மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் இது பற்றி ஆணையர் திவ்யா தெரிவிக்கும் பொழுது, வரும் 17ம் தேதி முதல் பொதுமக்கள் http://census.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் சுய விபரங்களை பதிவு செய்து, அது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் அலுவலர்களிடம் பதிவு செய்யப்பட்ட விவரங்களை அளிக்கலாம்.

மேலும் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணியும் தொடங்க உள்ளது எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்ய வரும் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு தங்களின் முழு தகவல்களையும் அளித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us