ADDED : ஜூலை 09, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே பிளஸ் 2 மாணவி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் புதுார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகள் ரேகா, 17; விரியூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி. நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே ஆண் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். இதை கண்ட அப்பகுதி நபர் ரேகாவின் பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் கண்டிப்பர் என்ற பயத்தில் இருந்த ரேகா நேற்று முன்தினம் இரவு பாத்ரூமில் புடவையால் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரேகாவின் உடலை கைப்பற்றி சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
