/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம்..
/
மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம்..
ADDED : ஆக 02, 2024 02:24 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணியின் தலைமையில் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் உள்ள அரும்பராம்பட்டு, ஆற்கவாடி, உலகலப்பாடி, மைக்கேல்புரம், மணலுார், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் ஒன்று சேர்ந்து மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடன் போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.