/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் மத்திய அரசு அதிகாரி ஆய்வு
/
கல்வராயன்மலையில் மத்திய அரசு அதிகாரி ஆய்வு
ADDED : ஜூலை 07, 2024 04:26 AM

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மத்திய அரசின் நிதி ஆயோக் சார்பு செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
கல்வராயன்மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் முன்னேற்றத்தை நாடும் வட்டார முழுமை இயக்க திட்டம் சார்பில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மத்திய அரசின் நிதி ஆயோக் சார்புச் செயலாளர் வினித்குமார் குரோவர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை ஊராட்சிக்குட்பட்ட கோணக்காடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்றும் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் புதிய சாலைகளின் தரம், வெள்ளிமலையில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்படும் புதிய துணை சுகாதார மையத்தின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தனர்.
இதில் ஒன்றிய சேர்மன் சந்திரன், துணை சேர்மன் பாச்சா பீ ஜாகிர் உசேன், ஊராட்சி தலைவர் ரத்தினம் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.